சேலம் கன்னங்குறிச்சியில் நேற்று ஒரேநாளில் 4 பெண்கள் வீட்டை விட்டு மாயமாகி உள்ளனர்
ஒரே நாளில் கணவன்களை கழட்டிவிட்டு கள்ளக் காதலன்களுடன் எஸ்கேப் ஆன 4 பெண்கள்! சேலத்தில் பரபரப்பு!

சேலம் கன்னங்குறிச்சி காவல் நிலையத்திற்கு உட் பட்ட செட்டிச்சாவடி கிரா மத்தை சேர்ந்தவர் ரவி, கூலித்தொழிலாளியான இவரருக்கும் மனைவி கவுரிக்கும் குழந்தைகள் இல்லை . இந்தநிலையில் , நேற்று கவுரி தனது வீட்டில் இருந்து வெளியே சென்றவர் , அதன்பிறகு திரும்பி வரவில்லை .
அவரை உறவினர்கள்
பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை . இதனால் ரவி கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில்
புகார் செய்தார். மேலும், அவர் தனது மனைவி எழுதிய ஒரு கடிதத்தை கொண்டு வந்து போலீசாரிடம்
கொடுத்தார். அந்த கடிதத்தில் உச்சநீதிமன்றம்
அண்மையில் அளித்த தீர்ப்பில் , திருமணம் ஆன பெண் , விருப்பம்போல் யாருடன் வேண்டும்
ஆனாலும் வாழலாம் என்று தெரிவித்துள்ளதை குறிப்பிட்டுள்ளார்.
இதனால் யாரும்
தன்னை தேடவேண்டாம், என் வாழ்க் கையை நான் தேடி
கொள்கிறேன் என்றும் கவுரி கூறியுள்ளார். தனக்கு
சொந்தமான பொருட்களை தனது பெற்றோரிடம் கொடுத்துவிடுங்கள் என்றும் கவுரி கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதைபார்த்து
அதிர்ச்சி அடைந்த போலீசார் , மாயமான அந்த பெண்ணின் கணவரிடம் விசாரணை நடத்தி கொண்டிருந்தனர். அப்போது,
கண்டப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த மாதவன், தனது உறவினர்களுடன் கன்னங்குறிச்சி காவல் நிலையத்திற்கு
வந்தார் .
அவர் , வீட்டில் இருந்த தனது மனை வியை திடீரென காணவில்லை என்றும் , அவரை கண்டுபிடித்து தருமாறும் கூறி ஒரு புகார் மனுவை அளித்தார் . இதையடுத்து அவரது மனுவை போலீசார் பெற்றுக் கொண்டு குடும்பத்தில் பிரச்சினை ஏதேனும் நடந்ததா ? என்று விசாரணை நடத்தினர் .
இதனை தொடர்ந்து
இரவு கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்த
மேலும் 2 பேர் அடுத்த அடுத்து காவல் நிலையத்திற்கு வந்தனர் . பின்னர் அவர்கள் , தங்களது
மனைவிகளையும் காணவில்லை என்றும் , அவர்கள் எங்கு சென்றார்கள் என்று தெரியாது எனவும்
, எனவே அவர்களையும் கண்டு பிடித்து தாருங்கள் என்றுக்கூறியும் புகார் மனுவை அளித்தனர் .
இதனால்
காவல் நிலையத்தில் இருந்த அனைத்து போலீசாரும் அதிர்ச்சி அடைந்து என்ன செய்வதென்று தெரியாமல்
திகைத்தனர் . பிறகு காணாமல் போன 4 பெண்களும் எங்கு சென்றார்கள் ? என அவர்களை போலீசார்
தீவிரமாக தேடி வருகின்றனர் . கன்னங்குறிச்சி பகுதியில் திருமணம் ஆன 4 பெண்கள் ஒரே நாளில்
மாயமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.