அத்திவரதர் சன்னதியில் உயிர்பலி! அடுத்தடுத்து 4 பேர் மரணம்! பதறவைக்கும் காரணம்!

காஞ்சிபுரம் அத்தி வரதர் சன்னதியில் நின்று ஒரே நாள் 4 பேர் மயங்கி விழுந்து உயிர் இழந்தனர்.


40 ஆண்டுகளுக்குப் பிறகு காஞ்சிபுரத்தில் அத்திவரதர் பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்து வருகிறார். 40 நாட்கள் மட்டுமே அத்திவரதர் பக்தர்களுக்கு தரிசனம் கொடுப்பார். இதன்பிறகு அத்திவரதர் மீண்டும் குளத்திற்கு அடியில் கொண்டு செல்லப்பட்டு விடுவார்.

நாற்பது ஆண்டுகளுக்கு பிறகு அத்தி வரதரை பார்க்க வாய்ப்பில்லை என்பதால் தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் காஞ்சிபுரத்தில் திரண்டு வருகின்றனர். சனி ஞாயிற்றுக் கிழமை சமயங்களில் கூட்டம் எக்குத் தப்பாக இருக்கிறது. 

நேற்று சந்திரகிரகணம் என்பதால் பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்ய ஆர்வம் காட்டவில்லை. சனி ஞாயிறு கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் இன்று அத்தி வரதரை தரிசிக்க ஏராளமானோர் திரண்டனர். இதனால் காலை 5 மணிக்கு சுமார் ஒன்றரை லட்சம் பேர் வரிசையில் காத்திருந்தனர்.

நேரம் செல்லச்செல்ல இந்த கூட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகமானது. இதனால் மரத்தடுப்புகள் க்கு இடையே நின்று கொண்டிருந்த பக்தர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. வயதில் மூத்த பக்தர்கள் பலர் அங்கேயே மயங்கி விழுந்தனர்.

மயங்கி விழுந்த பக்தர்கள் அனைவரும் உடனடியாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி மூன்று பெண் பக்தர்கள் மற்றும் ஒரு ஆண் பக்தர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். அத்தி வரதர் சன்னதிகள் முதலுதவி சிகிச்சை மையங்கள் எதுவும் இல்லாததால் உயிரிழப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இதேபோல் இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று கோவில் நிர்வாகமும் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகமும் எதிர்பார்க்கவில்லை. இதனால் அதற்குரிய ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. எனவேதான் திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி முதியவர்கள் உயிரிழக்க நேரிட்டதாக கூறப்படுகிறது.