முதலில் கணவன், பிறகு கர்ப்பிணி மனைவி, தொடர்ந்து மேலும் 2 பேர்! 15 நாளில் ஒரே குடும்பத்தில் 4 பேர் துர் மரணம்! பதற வைக்கும் காரணம்!

டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் 15 நாட்களில் உயிரிழந்த சம்பவமானது தெலங்கானா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தெலங்கானா மாநிலத்தில் சோனி என்ற இளம்பெண் வசித்து வந்தார். இவருடைய கணவரின் பெயர் குடிமல்ல ராஜகட்டு. சோனி மீண்டும் கர்ப்பமானார். இத்தம்பதியினருக்கு ஏற்கனவே வர்ஷினி என்ற 5 வயது மகளுள்ளார். 

16-ஆம் தேதியன்று, சோனியின் கணவரான குடிமல்ல ராஜகட்டு டெங்குவால் பாதிக்கப்பட்டார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், சிகிச்சை பலனளிக்காமல் அடுத்த இரு நாட்களில் உயிரிழந்தார்.

ராஜகட்டின் தாத்தாவின் பெயர் லிங்கையா. இவருடைய வயது 70. டெங்கு நோயால் பாதிக்கப்பட்டார். யசோதா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி 20-ஆம் தேதியன்று உயிரிழந்தார். அடுத்து சோனி கர்ப்பிணியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

இதனிடையே சோனியின் 5 வயது மகனான வர்ஷனிக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளது. தீபாவளி அன்று அவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர் அன்றே மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனிடையே 29-ஆம் தேதியன்று சோனி அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். ஆனால் மறுநாளே டெங்கு காய்ச்சலால் சோனி உயிரிழந்தார்.

குடும்பத்தில் உள்ள 4 பேர் உயிரிழந்து, தற்போது புதிதாகப் பிறந்த குழந்தை மட்டும் உயிரோடு உள்ளது. குழந்தையானது சோனியின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

சுகாதாரத்துறையினர் சோனியின் வீட்டை சுற்றி ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். டெங்கு கொசுக்கள் இனப்பெருக்கம் செய்வதற்கான குட்டைகள், தேங்கி நிற்கும் நீர் முதலியன அவ்விடத்தில் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். அப்பகுதியில் வழங்கப்படும் தண்ணீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த சம்பவமானது தெலங்கானா மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.