4 மாசம் கர்ப்பம்னு சொன்ன பிறகும் உடல் ரீதியா சித்ரவதை பண்றாங்க..! இளம் மனைவி எடுத்த விபரீத முடிவு! அதிர்ந்த உறவுகள்!

கோல்கொண்டா: வரதட்சணை கொடுமையால் கர்ப்பிணி பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.


கோல்கொண்டாவைச் சேர்ந்தவர் சிவ குமார். இவர், சமீபத்தில் 19 வயது நிரம்பிய சவுமியா என்ற பெண்ணை  திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து, இருவரும் ஐதராபாத்தில் உள்ள ஃபிலிம் நகருக்கு இடம்பெயர்ந்தனர். ஆனால், புகுந்த வீட்டில் சவுமியாவை வரதட்சணை கேட்டு பலரும் கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதனால் கடும் மன உளைச்சல் அடைந்த சவுமியா, கர்ப்பமாக இருந்தபோதிலும் வேறு வழியின்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.   அவரது சாவுக்கு, சிவ குமாரின் குடும்பத்தினரே காரணம் என்று, சவுமியாவின் குடும்பத்தினர் போலீசில் புகார் செய்துள்ளனர்.

இதன்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம் கோல்கொண்டா பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியது