45 வயது நடிகையுடன் 34 வயது ஸ்ரீதேவி மகன் காதல் வயப்பட்டது எப்படி? இதுவரை வெளிவராத சீக்ரெட்ஸ்!

மும்பை: மலைகா அரோரா மற்றும் அர்ஜூன் கபூரின் காதல் கதைதான் தற்போது பாலிவுட்டில் வியப்பாக பேசப்படும் விசயமாக உள்ளது.


ஆம். 45 வயதாகும் மலைகா அரோரா ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தையும் பெற்றவர் ஆவார். இந்நிலையில், விவாகரத்து பெற்று மகனுடன் தனியாக வசித்து வரும் மலைகாவுக்கு, 34 வயதான சக நடிகர் அர்ஜூன் கபூருடன் நெருக்கம் ஏற்பட்டது. இருவரும் பார்ட்டிகளுக்கு ஒன்றாகச் செல்வது,  விருந்துகளில் பங்கேற்பது, விடுமுறையை செலவிடுவது என ஒன்றாக பல இடங்களுக்கு விசிட் அடிக்க தொடங்கினர்.

முதலில் இது சாதாரண விசயமாகத்தான் பார்க்கப்பட்டது. ஆனால், இருவரும் வெளிநாடுகளுக்குக் கூட ஒன்றாகச் செல்ல தொடங்கிய பிறகே, இவர்களுக்குள் ஏதோ உள்ளது என்று  பாலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவியது. ஆரம்பத்தில் மிக ரகசியமாக இருந்து வந்த மலைகாவும், அர்ஜூனும், சில மாதங்களிலேயே  வெளிப்படையாக தாங்கள் காதலிப்பதாக அறிவித்தனர்.  

அதுவும் சமீபத்தில் அர்ஜூன் கபூரின் பிறந்த நாளில், மலைகா அரோரா மீண்டும் ஒருமுறை தனது காதலை வெளிப்படையாக அறிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில் அர்ஜூனையும் டேக் செய்து, ''பொருத்தமான காதலர்கள்,'' எனத் தலைப்பிட்டுள்ளார். அதில், ''சரியான காதல் அமைந்தால் மனம் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும். மன அமைதி கிடைக்கும்,'' என்றும் மலைகா எழுதியுள்ளார்.  

ஏற்கனவே, சில மாதங்களுக்கு முன்பாக, ஊடகம் ஒன்றில் பேட்டி அளித்த மலைகா, ''நம்மை புரிந்துகொள்ளும் ஒரு நபர் கிடைப்பது கஷ்டம். அர்ஜூன் என்னை சரியாகப் புரிந்துகொண்ட நபராக உள்ளார். என்னை எந்த நேரமும் சிரிக்க வைக்கிறார். என்னுள் இருக்கும் உணர்வுகளை வெளிப்படுத்தவும், அமைதிப்படுத்தவும் அவரால் முடிகிறது. அதனால்தான், அவரை நான் காதலிப்பதாக உணர்கிறேன்,'' என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.