52 வயது திருமணமான இயக்குனருடன் ரகசிய வாழ்க்கையா? புகைப்படம் வெளியிட்டு பதில் அளித்த 32 வயது நடிகை!

ஐதராபாத்: ஏற்கனவே திருமணமான பிரபல சினிமா இயக்குனர் ஒருவருடன் நடிகை சார்மி லிவிங் டூகெதர் முறையில் வாழ்வதாக எழுந்துள்ள வதந்திக்கு அவர் பதில் அளித்துள்ளார்.


தமிழ் சினிமாவில் காதல் அழிவதில்லை என்ற படம் மூலமாக அறிமுகம் ஆனவர் சார்மி. ஆனால்,  தமிழில் போதிய வாய்ப்புகள் கிடைக்காத அவருக்கு தெலுங்கு மொழியில் ஏராளமான பட வாய்ப்புகள் கிடைக்கவே, அதனை பயன்படுத்தி, அங்கே முன்னணி நடிகையாக வளர்ந்துவிட்டார்.

இந்நிலையில், தற்போது நடுத்தர வயதை கடந்த சார்மிக்கு, பட வாய்ப்புகள் பெரிதாக இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால், அவர் சினிமா தயாரிப்பில் ஈடுபட தொடங்கியுள்ளார்.  இதற்கிடையே தெலுங்கு சினிமா இயக்குனர் புரி ஜெகன்நாத்துடன் சார்மி லிவிங் டூகெதர் முறையில் வாழ்வதாக, தகவல் பரவுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனை ஆரம்பம் முதலே சார்மி மறுத்து வந்தாலும், வதந்திகள் இதுவரை ஓய்ந்தபாடில்லை. இந்நிலையில், சில நாள் முன்பாக, புரி ஜெகன்நாத் தனது 23வது ஆண்டு திருமண நாளை கொண்டாடினார். இதையொட்டி, ஜெகன்நாத், அவரது மனைவியுடன் போஸ் கொடுக்கும் புகைப்படம் ஒன்றை எடுத்து, இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள சார்மி, அவர்கள் 2 பேருக்கும் திருமண நாள் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். இதன்மூலமாக, தன்னைப் பற்றியும், புரி ஜெகன்நாத் பற்றியும் பரவும் வதந்திகளுக்கு அவர் ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்...