ஓடும் ரயில்.. சீட்டுக்கு அடியில் 3 வயது சிறுமியின் சடலம்..! உடல் முழுவதும் காயம்! சேலத்தை அதிர வைத்த பகீர் சம்பவம்!

சேலம்: ஓடும் ரயிலில் சீட்டிற்கு அடியில் குழந்தையின் சடலம் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஜோலார்பேட்டையில் இருந்து சேலம் நோக்கி இன்று (அக்.,17) காலை ரயில் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்த ரயில் பொம்மிடி அருகே வந்தபோது, பயணிகள் பெட்டி ஒன்றில், சீட்டிற்கு அடியில் குழந்தையின் சடலம் கிடப்பதாக, சக பயணிகள் பார்த்து, ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதன்பேரில் போலீசார் விரைந்து சென்று, குழந்தையின் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். குழந்தைக்கு 3 வயது இருக்கலாம் என்றும், பார்ப்பதற்கு வட நாட்டு முக சாயலில் இருப்பதால் ஓடும் ரயிலில் அதன் பெற்றோர் விட்டுச் சென்றிருக்கலாம் என்றும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுபற்றி தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.