5வது மாடியின் பால்கனியில் தொங்கிய குழந்தை! மெத்தைகளுடன் காத்திருந்த மக்கள்! நொடியில் நிகழ்ந்த அதிசயம்!

பால்கனியிலிருந்து கீழே விழுந்த 3 வயது சிறுவனை பொதுமக்கள் ஒன்றினைந்து காப்பாற்றியுள்ள வீடியோவானது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சீனா நாட்டில் சோங்கிங் என்னும் மாநகரம் அமைந்துள்ளது. இதற்கு உட்பட்ட ஜியுலாங்க்போ என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சிறுவனொருவன் உறக்கத்திலிருந்து எழுந்து தன் பாட்டியை தேடியுள்ளான். அவனுடைய பாட்டி காய்கறி வாங்குவதற்காக  கடைக்கு சென்றிருந்தார். 

குழந்தை தவழ்ந்து கொண்டே பால்கனிக்கு வந்துள்ளது. கால்த்தவறி கீழே விழுந்துள்ளான். விளிம்பில் 4 நிமிடங்களுக்கு குழந்தை தொங்கியுள்ளது. எதிர்வீட்டில் இருந்தோர் குழந்தை பலி கொண்டிருப்பதைக் கண்டு பேரதிர்ச்சி அடைந்தார்.

கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினரை உஷார் படுத்தியுள்ளார். பொதுமக்கள் மெத்தைகளுடன்  கீழே கூடிநின்றுள்ளனர். குழந்தை சில நிமிடங்களில் மெத்தையில் அழகாக விழுந்தது. எந்தவித அசம்பாவிதமும் இன்றி பொதுமக்கள் குழந்தையை பத்திரமாக மீட்டுள்ளனர். இந்த சம்பவமானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.