விட்டுடுங்க ப்ளீஸ்! கெஞ்சிய உற்ற நண்பன்! ஆனால் அடித்தே கொன்ற மூன்று நண்பர்கள்! காரணம் ஒரே ஒரு ஐபோன்!

ஐ-போன் என்கிற மொபைல் வகையை வாங்குவதற்கு மூன்று இளைஞர்கள் தங்களுடைய நண்பனை கொலை செய்த சம்பவமானது டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


டெல்லியில் மோதி நகர் என்னும் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் விக்கி என்ற இளைஞன் வசித்து வந்துள்ளான். இவனுக்கு பெற்றோர் சில மாதங்களுக்கு முன்னர் ஒரு ஐ-போனை வாங்கி கொடுத்தனர். அவனுக்கு 3 பேர் நெருங்கிய  நண்பர்களாகவர்.

தன்னுடைய புது மொபைலை அவர்களிடம் நண்பர்களிடம் பெருமையாக காட்டியுள்ளான். இந்நிலையில், இவனுடைய நண்பர்கள் அவனை கண்டு பொறாமை அடைந்துள்ளனர். மேலும் அந்த ஐ-போனை தங்களிடம் கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர். அதற்கு விக்கி ஒப்புக்கொள்ளவில்லை. 

இதனால் ஆத்திரமடைந்த 3 நண்பர்கள் விக்கியை கடத்தி சென்றனர். பசாய தாராப்பூர் என்ற பகுதியில் பாழடைந்த வீட்டொன்றில் விக்கியை அடித்து துன்புறுத்தி கொலை செய்துள்ளனர். தன்னை விட்டுவிடுமாறு எவ்வளவோ கெஞ்சியும் கேட்காமல் அடித்தே கொலை செய்துள்ளனர். 

2 நாட்களாக விக்கியை காணாமல் இருந்ததால் அவனின் பெற்றோர் காவல் துறையில் புகாரளித்தனர். அந்தப் பாழடைந்த வீட்டில் ஒரு இளைஞனின் உடல் சடலமாக இருப்பதை பொதுமக்கள் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சென்ற காவல்துறையினர் அது விக்கியின் உடல்தான் என்பதை ஊர்ஜிதப்படுத்தியுள்ளனர்.

மேலும் அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கண்காணித்தபோது அவன் 3 நண்பர்களுடன் அந்த பகுதிக்கு சென்றுள்ளதை கண்டறிந்துள்ளனர். அந்த 3 இளைஞர்களை விசாரித்த போது தாங்கள் ஐ-போனிற்கு ஆசைப்பட்டு கொலை செய்துள்ளதை ஒப்பு கொண்டுள்ளனர்.

3  இளைஞர்களையும் கைது செய்துள்ளனர். பின்னர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் கொண்டு சேர்க்க முடிவு செய்துள்ளனர். இந்த சம்பவமானது டெல்லியில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.