ஒரு பெண்! ஒரு ஆண்! உடன் ஒரு குழந்தை! தண்டவாளத்தில் கிடந்த 3 சடலங்கள்! அதிர்ந்த கிருஷ்ணகிரி!

ரயில் தண்டவாளத்தில் 3 பேரின் சடலங்கள் இருந்த சம்பவமானது ஊத்தங்கரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை எனும் பகுதி அமைந்துள்ளது. இதனருகே ராமகிருஷ்ணபதி கிராமம் அமைந்துள்ளது. இன்று அதிகாலை ஒரு ஆண், பெண் மற்றும் குழந்தை என்ற 3 பேரின் சடலங்கள் கிடைத்துள்ளன.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சேலம் ரயில்வே காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த ரயில்வே காவல்துறையினர் 3 சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குழந்தையின் கையில் சிகிச்சை எடுக்கப்பட அடையாளமாக பேண்டேஜ் இருந்துள்ளது. 3 பேரும் தற்கொலை செய்து கொண்டனரா அல்லது ரயிலிலிருந்து தவறி கீழே விழுந்தனரா என்பது குறித்து காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும், சமீபத்தில் குழந்தைக்கு சிகிச்சை நடந்துள்ளதால் அருகிலுள்ள மருத்துவமனைகளில் குழந்தையை பற்றி விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவமானது இன்று காலை ஊத்தங்கரை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.