சென்னை: 10 வயது சிறுமியை பலாத்காரம் செய்து மாடியில் இருந்து வீசிக் கொன்ற கொடூரன் கைது செய்யப்பட்டான்.
நடு ராத்திரி..! ஒன் பாத்ரூம் சென்ற சிறுமி...! வழிமறித்து பாலியல் தொல்லை..! முரண்டு பிடித்ததால் 3வது மாடியில் இருந்து தூக்கி வீசிய கொடூரன்!
சென்னை மதுரவாயல் கேட்டுக்குப்பத்தில் இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. இங்கு வசிக்கும் சுரேஷ் என்ற 29 வயது நபர், அதே பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளான். அந்த அதிர்ச்சியில் சிறுமி உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. எனினும், அடங்காத சுரேஷ் சிறுமியின் சடலத்தை 3வது மாடியில் இருந்து கீழே வீசியுள்ளான். இதில், சிறுமியின் சடலம் பலத்த காயமடைந்தது. இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த போலீசார் குற்றவாளியை கைது செய்ததுடன், சிறுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தற்போதுதான் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதனால், நாடு முழுவதும் பாலியல் குற்றங்கள் குறையும் எனக் கூறப்பட்ட நிலையில், அடுத்த நாளே இப்படி ஒரு கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளதால், பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.