வெறும் காய்ச்சல்னு தான் சொன்னாங்க.. ஆனால் டெங்கு! 28 வயது இளம் மனைவியின் பறிபோன உயிர்! கதறும் கணவன்! நாமக்கல் சோகம்..

சேலம் மாவட்டத்தில் மேலும் ஒரு பெண் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


அஸ்தம்பட்டி மணக்காடு பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் நாமக்கல் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி யோகேஸ்வரிக்கு 28 வயது ஆகிறது. எம்.எஸ்.சி. பயோடெக்னாலஜி முடித்துள்ளார். இந்த தம்பதி நாமக்கல்லில் வசித்து வந்தனர். இந் நிலையில் யோகேஸ்வரிக்கு சில நாட்களுக்கு முன்னர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட யோகேஸ்வரிக்கு மேலும் காய்ச்சல் அதிகமாகி உள்ளது. காய்ச்சல் வந்தாலே தனியார் மருத்துவமனைக்கு செல்லாமல் அரசு மருத்துவமனைக்கு வருமாறு பலமுறை அரசு தெரிவித்துள்ளது. 

இதற்கிடையே மனைவி யோகேஸ்வரியை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அவருக்கு ரத்த பரிசோதனை செய்த மருத்துவர்கள் யோகேஸ்வரிக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதை கண்டறிந்தனர். இதை அடுத்து அவர் தீவிர சிகிச்சை டெங்கு சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் டெங்கு பாதிப்பு முற்றிய நிலை என்பதால் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார் யோகேஸ்வரி. இதையடுத்து கணவரும், உறவினர்களும் யோகேஸ்வரியின் உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் சேலம் மணக்காட்டில் உள்ள அவரது சொந்த வீட்டிற்கு உடலை எடுத்துச் சென்றனர்.

பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்கள் கூட காய்ச்சல் வந்தால் சீரியசாக எடுத்துக் கொள்ளாமல் சாதாரணமாக எடுத்துக் கொள்வதால் இதுபோல் அகால மரணம் ஏற்படுகிறது. காய்ச்சல் வந்த உடனே ரத்த பரிசோதனை செய்திருந்தால் பேராசிரியர் தன்னுடைய அன்பான மனைவியை இழந்திருக்க மாட்டார்.