இரவு 11 மணி..! கடைசியாக சாம்பல் நிற பேண்ட்! கருப்பு நிற சட்டை! மாயமான இளம்பெண்! திக்திக் சம்பவம்!

கனடா நாட்டில் இந்திய பெண் ஒருவர் 6 நாட்களாக மாயமாகியருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கனடா நாட்டில் டொரண்டோ என்ற நகரம் அமைந்துள்ளது. இங்கு ஹீரன் பட்டேல் என்ற 28 வயது பெண் வசித்து வந்துள்ளார். இந்தப் பெண்ணை ஜனவரி மாதம் 11ம் தேதி முதல் காணவில்லை என்று டொரன்டோ காவல்துறையினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

கடைசியாக இந்த பெண்ணை அன்றிரவு 11 மணியளவில் இஸ்லிங்டன் மற்றும் ஸ்லீவ்ஸ் ஆகிய பகுதிகளில் காணப்பட்டார் என்று கூறியுள்ளனர். அவர் காணாமல் போன அந்தநாளில் சாம்பல் நிற பேண்டும், கருப்பு நிற சட்டையும் அணிந்திருந்தார் என்று கூறியுள்ளனர். 

இந்த பெண்ணைப் பற்றி ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் காவல் நிலையத்தில் பகிருமாறும் டொரன்டோ காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த பதிவானது சமூக வலைதளங்களிலும் பகிரப்பட்டு வருகிறது. இந்த சம்பவமானது கனடா நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.