நள்ளிரவு கழிவறைக்கு எழுந்து சென்ற இளம் பெண்..! அங்கு அவர் பார்த்த பகீர் காட்சி..! பேசும் திறனை இழந்த பயங்கரம்! அதிர்ச்சி காரணம்!

நள்ளிரவில் கழிவறைக்கு சென்ற இளம்பெண் அதிர்ச்சியில் பேசும் திறனை இழந்த சம்பவமானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கேரளா மாநிலத்தில் கோழிக்கோடு என்ற இடம் அமைந்துள்ளது. இதற்கு உட்பட்ட "சேத்துகதவு ராஜீவ்காந்தி காலனி" என்ற இடத்தில் அஞ்சு ஷோபிஷ் என்ற 27 வயதான பெண் வசித்து வந்துள்ளார். அப்பகுதியில் நள்ளிரவில் மக்களை பயமுறுத்தும் "கருப்பு மனிதன்" என்ற நபர் நள்ளிரவு நேரத்தில் சுற்றி வருவதை வழக்கமாக கொண்டுள்ளான்.

சில நாட்களுக்கு முன்னர் அஞ்சு நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது தன்னுடைய கழிவறையில் தண்ணீர் வீணாக செலவழியும் சத்தம் கேட்டுள்ளது. அதனை மூடுவதற்காக அஞ்சு சென்றுள்ளார். அந்த நேரத்தில் வீட்டருகிலிருந்த கல்லூரி சுவற்றின் மீது அந்த மர்ம நபர் முக்காடு போட்டபடி நின்றுகொண்டு அஞ்சுவையே முறைத்து பார்த்து கொண்டு வந்துள்ளார்.

இதனால் பேரதிர்ச்சியில் ஆழ்ந்த அஞ்சு, தன்னுடைய பேசும் திறனை இழந்துள்ளார். உடனடியாக உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அஞ்சுவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் தற்காலிகமாக தான் பேசும் திறனை இழந்துள்ளார் என்றும் அதிர்ச்சியிலிருந்து அவரை மீள வைக்க முயற்சி செய்து வருவதாகவும் கூறியுள்ளனர்.

தங்களுடைய காலனி பகுதியில் அடிக்கடி சுற்றி வரும் அந்த கருப்பு மனிதனை கைது செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.