62 வயது பெண்மணிக்கு 4வது கணவன் ஆன 26 வயது இளைஞன்! கிளுகிளு காரணம்!

துருசியாவை சேர்ந்த 26 வயது இளைஞன் ஒருவர், 62 வயது பெண்மணியை உயிருக்கு உயிராக காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் பலரது மத்தியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


இசபெல் டிபில் என்ற 62 வயது பெண்மணி பிரித்தானியா நாட்டை சேர்ந்தவர் ஆவார். இவருக்கு ஏற்கனவே 3 முறை திருமணம் நடைபெற்ற மூன்று கணவர்களும் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளனர். இசபெல் தன்னுடைய குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் பிரித்தானிய நாட்டில் வசித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு துருசியா நாட்டிற்கு சுற்றுலா சென்ற இசபெலுக்கு காபி ஷாப்பில் பணியாற்றிவந்த பேராம் என்பவர் பழக்கமாகி இருக்கிறார். 

இதனைத்தொடர்ந்து பேராம் மற்றும் இசபெல் இருவரும் நட்பாக பழகி உள்ளனர். பின்னர் இசபெல் தன்னுடைய சொந்த நாட்டிற்கு திரும்பியிருக்கிறார். வீடு திரும்பிய அவருக்கு பேராம் நினைவு வந்துள்ளது. ஆகையால் அவருடன் பேஸ்புக்கில் நட்பாக பழகலாம் என்று எண்ணி இருக்கிறார் இசபெல். பின்னர் பேராம் என்ற பெயர் கொண்ட அதே நாட்டை சேர்ந்த வேறு ஒரு இளைஞருக்கு ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் அளித்திருக்கிறார் இசபெல். ஒருகட்டத்தில் இசபெல் எதிர்பார்த்த அந்த இளைஞர் தான் இல்லை என்பதை பேராம் தெளிவுபடுத்தி இருக்கிறார்.

இருப்பினும் இருவரும் நட்பாக பழகி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இவர்களுக்கு இடையே இருந்த நட்பு காதலாக மாறியுள்ளது. பேராம் அந்த 62 வயது மிக்க இசெபலை உயிருக்குயிராக காதலித்து வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து இசபெல் துருசியாவிற்கு தன்னுடைய காதலன் பேராமை சந்திப்பதற்காக சென்றிருக்கிறார். அப்படியாக செல்லும்பொழுது கடந்த ஜனவரி மாதம் அவர்கள் இருவரும் அங்கேயே திருமணம் முடித்து இருக்கிறார்கள். இதுகுறித்து பேராமிடம் கேட்ட பொழுது, என்னுடைய மனைவியை நான் வயது முதிர்ந்த பெண்ணாக பார்க்கவில்லை.. நல்ல குணமுள்ள பெண்ணாக பார்க்கிறேன் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.