65 வயது வெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்த 26 வயது இளைஞன்! அசர வைக்கும் காரணம்!

பணத்திற்காக தன்னை விட 35 வயது அதிகமாக இருந்த ஸ்காட்லாந்து பெண்னை இலங்கை இளைஞர் ஒருவர் காதலித்த சம்பவமானது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் டயன் டீ. இவருடைய வயது 60. இவர் ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள பெரும் பணக்காரர்களில் ஒருவர். 7 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். டயன் டீ அங்கு பிரியஞ்சன் டீ ஸோய்சா என்ற இளைஞரை காதலித்துள்ளார். அவருக்கு வயது 26. ஆறு மாதங்கள் நாங்கள் இருவரும் ஒன்றாக இருந்து காதலித்து வந்தனர். 

சிறிது நாட்கள் கழித்து ஸ்காட்லாந்து பெண்மணிக்கு பிரியஞ்சன் ஏற்கனவே திருமணமானவர் என்ற செய்தி தெரிந்துள்ளது. 2017-ஆம் ஆண்டில் டயன் பிரித்தானியாவில் உள்ள தனது வீட்டை விற்று, இலங்கை நாட்டின் தலைநகரான கொழும்புவில் ஒரு வீட்டை வாங்கினார். பின்னர் 31,000 இங்கிலாந்து பவுண்டுகளை பிரியஞ்சனிடம் அளித்துள்ளார்.

இந்நிலையில் எதிர்பாராவிதமாக மே 30-ஆம் தேதியன்று பிரியஞ்சன் தன் நண்பர்களால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து டயன் கூறுகையில், "பிரியஞ்சன் திடீரென்று பணக்காரர் ஆனதால் அவருடைய நண்பர்கள் அவர் மீது பொறாமைப்பட்டு சுட்டுக் கொன்றுள்ளனர். நான் அவருடன் வசித்த போது அவர் நண்பர்கள் அவரை அடிக்கடி வீட்டில் இருந்து அழைத்துச் செல்வர். மேலும் அவரின் குடும்பத்தார் என்னிடம் பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்வர். தொடக்கத்திலேயே என் வீட்டார் அவர் என்னை பணத்திற்காகவே காதலித்து வந்தார் என்று கூறினர். அதை ஏற்க மறுத்ததே என்னுடைய வாழ்வில் பெருத்த இடியாக அமைந்தது. மீண்டும் ஸ்காட்லாந்து வர என்னிடம் கொஞ்சம் கூட பணம் இல்லை. எப்படியோ முயன்று பணத்தை சேமித்து நான் ஸ்காட்லாந்து வந்தடைந்தேன். பிரயஞ்சன் என்னை பணத்துக்காக மட்டுமே காதலித்துள்ளார் என்பதை நெடுநாட்கள் கழித்து புரிந்து கொண்டேன்" என்று மனமுருக கூறினார்.

இந்த சம்பவமானது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.