கடைசியாக வந்த வீடியோ கால்..! இரவில் வீட்டில் இருந்து வெளியே சென்ற 1 வயது குழந்தையின் தாய்! பிறகு அரங்கேறிய பகீர் சம்பவம்!

மகளின் தற்கொலையில் சந்தேகமிருப்பதாக பெற்றோர் கூறியிருப்பது சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் எனுமிடம் அமைந்துள்ளது. இதற்கு அருகே ஊராண்டி வலசு கொட்டகை என்னும் இடத்தை சேர்ந்தவர் குப்புசாமி. இவர் ஒரு லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் சசிகலா. இத்தம்பதியினருக்கு 23 வயதில் கௌசிகா என்ற மகளுள்ளார்.

இவருக்கு 3 ஆண்டுகளுக்கு முன்னர் சின்னசேலம் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இத்தம்பதியினருக்கு 1 வயதான பூஷிகா என்ற குழந்தையுள்ளார். இதனிடையே கணவன் மனைவிக்கு கடந்த 3 ஆண்டுகளாக  கடுமையான தகராறுகள் ஏற்பட்டுள்ளன. இதுகுறித்து கௌசிகா தன்னுடைய தாயார் வீட்டில் நிறைய முறை கூறியுள்ளார். சரவணன் சின்னசேலம் பகுதியில் உள்ள  அலுமினிய பாத்திரக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். கௌசிகா அதே பகுதியிலுள்ள ஒரு பியூட்டி பார்லரில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இதன் காரணமாக 2 மாதங்களுக்கு முன்னர் கௌசிகா தன்னுடைய தாயாரின் வீட்டுக்கு வந்துள்ளார். 2 நாட்களுக்கு முன்னர் இரவு நேரத்தில் வெளியே சென்ற கௌசிகா நெடுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. அதற்கு முன்னதாக கவுசிகாவிற்கு செல்போன் வீடியோ அழைப்பு வந்துள்ளது.

அதன் பிறகு தான் அவர் வெளியே சென்றார். ஆனால் திரும்பவில்லை. இதனால் பயந்துபோன உறவினர்கள் அவரை தேடி சென்றுள்ளனர். வயக்காட்டில் படுகாயங்களுடன் கௌஷிகா கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக அப்பகுதி காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பெண்ணின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே மகளின் சாவில் மர்மமிருப்பதாக பெற்றோர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரேத பரிசோதனை அறிக்கையில் விஷம் மற்றும் தற்கொலைக்கான அடையாளங்கள் இல்லை என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் சிறப்பு உடற்கூறாய்வுக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவமானது சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.