ஒன் பாத்ரூமே வராது! வந்தாலும் வயிறு வீங்கி ஒரே நேரத்தில் 3 லிட்டர்! 23 வயது இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட விநோத பிரச்சனை! அதிர்ச்சியில் டாக்டர்கள்!

லண்டன்: 5 ஆண்டுகளாக டாய்லெட் போக முடியாமல் அவதிப்பட்ட பெண்ணை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.


இங்கிலாந்தில் உள்ள டெர்பிஷைர் பகுதியை சேர்ந்தவர் லவ். 23 வயதான இவர், கடந்த 5 ஆண்டுகளாக, சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்பட்டிருக்கிறார். இதனால், நாளுக்கு நாள் அவரது வயிறு வீங்கி, கர்ப்பம் தரித்ததுபோல தோற்றம் பெற்றார். ஒருகட்டத்தில் வலி தாங்க முடியாமல் அவதிப்பட்ட லவ், மருத்துவமனை சென்றிருக்கிறார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுநீர்ப்பையில் 3 லிட்டருக்கும் அதிகமான நீர் தேங்கியிருந்ததை கண்டறிந்தனர். உடனடியாக, அறுவை சிகிச்சை செய்து, சிறுநீரை வடிகட்டி வெளியில் எடுக்கப்பட்டது.  

லவ்வுக்கு, 4 வயது முதலாக, சிறுநீர்ப்பையில் பிரச்னை இருந்து வந்திருக்கிறது. இதனால், அவர் அடிக்கடி சிறுநீர் கழிப்பதில் சிக்கலை சந்தித்திருக்கிறார். இன்னும் சில காலம் இருந்திருந்தால், சிறுநீர்ப்பை வெடித்து அவர் உயிரிழந்திருப்பார் என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். சிறுநீர்ப்பை தொற்று சம்பந்தப்பட்ட பாதிப்பு இது என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.