தீயாய் பரவிய வீடியோ..! கல்லூரியில் இருந்து கழுத்தை பிடித்து வெளியே தள்ளப்பட்ட 20 வயதே ஆன ரஹிமா! அதிர்ச்சி காரணம்!

டாக்கா: வங்கதேசத்தில் ரோஹிங்கிய சமூகத்தைச் சார்ந்தவர் என்பதால் இளம்பெண் ஒருவருக்கு உயர்கல்வி மறுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ரஹிமா அக்தர் என்பவர் வங்கதேசத்தில் உள்ள குதுபலாங் அகதிகள் முகாமில் வசித்து வருகிறார். 20 வயதாகும் இந்த பெண், ரோஹிங்கிய சமூகத்தைச் சேர்ந்த முஸ்லீம் ஆவார். ரோஹிங்கிய சமூகத்தினர் மியான்மர் நாட்டில் இருந்து வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து வருபவர்கள் என்பதால், வங்கதேசத்தில் அவர்களுக்கு, அகதிகள் அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரஹிமாவின் குடும்பத்தினர் 1992ல் வங்கதேசத்தில் குடிபுகுந்தனர். ரஹிமா வங்கதேசத்திலேயே 1999ம் ஆண்டு பிறந்தார். எனினும், அவருக்கும் மற்ற ரோஹிங்கியா சமூகத்தினரை போன்ற நிலைதான். 

படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்ட ரஹிமா, பள்ளிப் படிப்பை நிறைவு செய்த கையோடு, பல்கலைக்கழகம் அல்லது காலேஜ் ஏதேனும் ஒன்றில் சேர்ந்து பட்டம் படிக்கலாம் என தீர்மானித்தார். இதன்படி, ரோஹிங்கியா சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற அடையாளத்தை மறைத்து, வங்கதேசத்தில் உள்ள காக்ஸ் பஜார் யுனிவர்சிட்டியில் சட்டப் படிப்பில் சேர்ந்தார்.

ஆனால், அவரது அடையாளம் தெரியவந்ததால், தற்போது அவரை காக்ஸ் பஜார் யுனிவர்சிட்டி வெளியேற்றிவிட்டது.  இதற்கு காரணம், கடந்த ஆண்டில் ரஹிமா அசோசியேட்டட் பிரஸ் (ஏபி) எனும் சர்வதேச ஊடக செய்தி நிறுவனத்திற்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.

அந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் நிலையில், ரஹிமாவின் அடையாளமும் தெரியவந்துள்ளது. இதனை பார்வையிட்ட அவரது பல்கலைக்கழக நிர்வாகம், உடனடியாக அவரை வெளியேற்றிவிட்டது. 

ரோஹிங்கியா மக்கள், படிப்பதற்கு வங்கதேசத்தில் ஆரம்பத்தில் அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், பாதுகாப்பு காரணங்களை காட்டி, கடந்த சில ஆண்டுகளாக, ரோஹிங்கிய சமூகத்தினருக்கு கல்வி கற்க அனுமதி மறுக்கப்படுகிறது. அவர்கள் விரும்பினால் முகாம்களிலேயே செலவு செய்து, தனியார் மூலமாக கல்வி கற்றுக்கொள்ளலாம். அத்துடன், அவர்களது செல்ஃபோன் சேவை கூட சமீப நாட்களாக முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.