கிலோ ரூ.200! பஸ் ஸ்டான்டில் வைத்து மான்கறி விற்பனை ஜோர்!

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் கிலோ ரூ.200 என மான்கறி விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையத்தில் மான்கறி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து சாதாரண நபர் போல் மாறுவேடத்தில் சென்ற போலீசார் மான் கறி விற்பனை செய்பவர்களை அணுகியுள்ளனர்.

அப்போது கிலோ 200 ரூபாய் என்று மான் கறிக்கு பேரம் பேசியுள்ளனர். உடனடியாக அவர்களை கைது செய்த போலீசார் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த கார்த்திகேயன், ஆனந்தன் ஆகியோர் வனப்பகுதியில் மானை வேட்டையாடி மான் கறி விற்றது தெரியவந்தது. அவர்களுக்கு தலா 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.