சென்னை ராகவா லாரன்சின் ஆசிரமத்தில் 20 பேருக்கு கொரோனா! 10 மாணவிகள், 5 மாணவர்களுக்கு நோய்த்தொற்று!

சென்னை அசோக்நகரில் நடிகர் லாகவா லாரன்ஸ் நடத்தி வரும் ஆதரவற்றோர் தங்கும் விடுதியில் தங்கியிருந்த 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


உலகமெங்கும் கொரோனா வைரஸ் தொற்று அதன் கோர தாண்டவத்தை ஆடி வரும் நிலையில், தமிழ்நாட்டிலும் கொரோனாவின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. அதிலும் குறிப்பாக சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதுவரை சென்னையில் மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் சென்னை அசோக் நகரில் நடத்திவரும் ஆதரவற்றோர் தங்கும் விடுதியில் தங்கியிருந்த 20 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 10 மாணவிகள், ஐந்து மாணவர்கள், 3 பணியாளர்கள் மற்றும் 2 சமையல்காரர்கள் உட்பட 20 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ராகவா லாரன்ஸ் நடத்திவரும் ஆதரவற்றோர் தங்கும் விடுதியில் கொரோனா உறுதிசெய்யப்பட்ட அனைவரும் நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.