ஸ்டார்ட்டிங் டிரபிள்! வேகமெடுக்காத பைக்! செயின் பறித்த இளைஞர்கள் பெண்களிடம் சிக்கி சின்னாபின்னமான சம்பவம்!

செயின் பறிப்பில் ஈடுபட்டவர்களை 2 பெண்கள் அடித்து உதைத்திருக்கும் வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


டெல்லியில் நாங்கலோய் எனுமிடம் அமைந்துள்ளது. சென்ற மாதம் 30-ஆம் தேதியன்று இரண்டு பெண்கள் இப்பகுதியில் சைக்கிள் ரிக்சாவில் சென்று கொண்டிருந்தனர். இவ்விடத்திற்கு வந்து இறங்கிய பிறகு சாலையை கடக்க முயன்றனர். 

அப்போது அவர்களுக்கு அருகே இருச்சக்கர வாகனத்தில் 2 இளைஞர்கள் வேகமாக வந்து கொண்டிருந்தனர். பின்னால் உட்கார்ந்திருந்த நபர் ஒரு பெண்ணின் செயினை பறித்துள்ளனர். இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டி தப்பிக்க முயன்றபோது இளைஞர்கள் தடுமாறினார்.

இளைஞர்களின் தடுமாற்றத்தை 2 பெண்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டனர். இதனால் 2 பெண்களும் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து கொண்டிருந்த நபரை எளிதாக பிடித்து இழுத்தனர். இருசக்கரவாகனம் நிலை தடுமாறியதால் இருசக்கர வாகனத்தை ஓட்டியவர் கீழே விழுந்தார். சிக்கிக்கொண்டு விடுவோம் என்ற பயத்தில் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். 

பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்த இளைஞரை பெண்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர். இதனை பார்த்த பொதுமக்கள் சிக்கிய இளைஞரை அடித்து துவைத்தனர். 

பின்னர் அவரை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். 2 பெண்களின் துணிச்சலான நடவடிக்கையானது வீடியோவாக எடுக்கப்பட்டது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.