விளையாடிக்கொண்டிருந்த குழந்தை ஆழ்கிணறில் விழுந்த சம்பவமானது திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
30 அடி ஆழம்..! ஆழ்துளைக் கிணறு! விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தைக்கு ஏற்பட்ட பயங்கரம்! அதிர்ச்சியில் மணப்பாறை!
திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை எனுமிடம் அமைந்துள்ளது. இங்கு நடுக்காட்டுப்பட்டி எனும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஆழ்துளை கிணறு அமைந்துள்ளது. இந்த கிணறானது 30 அடி ஆழம் பெற்றது. இந்த கிணற்றுக்கு அருகே 2 வயது குழந்தை ஒன்று விளையாடி கொண்டிருந்தது.
விளையாடி கொண்டிருந்த குழந்தை தவறி ஆழ்துளை கிணற்றில் விழுந்தது. குழந்தை கிணற்றில் விழுந்த உடன் பதறிப்போன அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
பின்னர் தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். காவல்துறையினர், தீயணைப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் குழந்தையை மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவமானது மணப்பாறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.