நொடியில் நிகழ்ந்த விபரீதம்! துடிதுடித்து இறந்த இளம் தம்பதி! 2 வயதில் அநாதையான குழந்தை! நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

கேரளா மாநிலத்தில் 2 வயது குழந்தையின் பெற்றோர் விபத்தில் உயிரிழந்த சம்பவமானது சோகத்தை ஏற்படுத்தியது.


கேரள மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரம். இங்கு ராகுல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய வயது 28. இவருடைய மனைவியின் பெயர் சௌமியா. இத்தம்பதியினருக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. 

இதனிடையே இவர்களுடைய உறவினர்களின் திருமணத்திற்கு செல்வதற்காக தங்களுடைய குடியிருப்பிலிருந்து காரில் புறப்பட்டு சென்றனர். காலை 11 மணியளவில் கொல்லம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராவிதமாக அரசு பேருந்து ஒன்று காரின் மீது வேகமாக மோதியது. 

சம்பவ இடத்திலேயே 2 பேரும் உயிரிழந்தனர். விபத்தில் இவர்களுடைய காரின் முன்பகுதி முற்றிலும் சிதைந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களுடைய உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். 8 மணி அளவில் குடியிருப்புக்கு அவர்களுடைய உடல்கள் கொண்டு வரப்பட்டன. 

அப்போது அவர்களுடைய உடல்களை பார்த்த உறவினர்கள் கதறி அழுதனர். நிகழும் எந்தவித துயரமும் தெரியாமல் அந்த குழந்தையானது குடியிருப்பின் வேறொரு அறையில் அமர்ந்து கொண்டிருந்தது. இந்த குழந்தையை இனி வளர்க்கப்போவது யார், பாலூட்ட போவது யார், அலங்கரித்து அழகு பார்க்க போவது யார் என்றெல்லாம் கூறி உறவினர்கள் கதறி கொண்டிருந்தனர்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.