டூ வீலரில் சாகசம்! பஸ்சுடன் ரேஸ்! 3 இளைஞர்களுக்கு நேர்ந்த விபரீதம்!

இந்தியாவில் சமீப காலத்தில் வாகன விபத்துகள் அதிகமாக ஏற்படுகின்றன. குறிப்பாக தமிழகத்தில் விபத்துகளின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டு போகிறது.


இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு அருகே பேருந்து மோதி 2 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரிய குரும்பூர் பகுதி என்பது காஞ்சிபுரத்திற்கு அருகே அமைந்துள்ளது. அப்பகுதியில் ஒரே இருசக்கர வாகனத்தில் 3 மாணவர்கள் கல்லூரிக்கு சென்றுகொண்டிருந்தனர். அவர்கள் ஒன்றாக செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர்.

நேரம் தாமதமானதால், அவர்கள் முன்னே சென்ற தனியார் பேருந்தை முந்திச்செல்ல முயன்றனர். அப்போது அந்த பேருந்தின் பக்கவாட்டு பகுதி இருசக்கர வாகனம் மீது உரசியுள்ளது. 

இதனால் நிலை தடுமாறி இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று மாணவர்களும் கீழே விழுந்தனர்.இதில் 2 மாணவர்கள் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த மற்றொரு மாணவரை பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.