சாலையோர ஒற்றைப் பனைமரம்..! காரில் வந்து சடலமான 2 பேர்! தஞ்சை திக் திக் திகில்!

தஞ்சை மாவட்டத்தில் அதிகாலையில் கல்லணை சாலையில் சென்று கொண்டு இருந்த கார் ஒன்று நிலைதடுமாறி சாலையோரம் இருந்த பனைமரத்தில் மோதியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை கலிமா நகரை சேர்ந்தவர் ஈரூஸ்மரக்காயர் இவர் கடலூரில் சூப்பர்மார்க்கெட் நடத்தி வருகிறார். இவர் நேற்று வியாபரம் சம்பந்தமாக காரில் சீர்காழி அருகே திருமுல்லை வாசல் பகுதியை சேர்ந்த சேக்தாவூத் ,அப்துல்ரசாக், ஜவர்ருதீன் ஆகியோருடன் கேரளாவிற்கு புறப்பட்டு வந்துள்ளார். 

இந்நிலையில், தஞ்சையை அடுத்த பூதலூர் அருகே உள்ள கல்லணை சாலையில் இன்று அதிகாலை கார் சென்று கொண்டிருந்த போது காரை ஓட்டிவந்த ஈரூஸ்மரக்காயர் அதிக நேரம் தூங்கமால் வந்தால் சற்று கண் அயர்ந்ததால் கார் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த பனைமரத்தில் வேகமாக கார் மோதி உள்ளது. கார் மோதிய வேகத்தில், காரின் முன்பக்கம் நொறுங்கியது. 

இந்த கார் விபத்தில் காரை இயக்கிய சூப்பர்மார்க்கெட் உரிமையாளர் ஈரூஸ் மரக்காயர், சேக்தாவூத் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பின்னர் காயமடைந்த இருவரையும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருவருக்கும் சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், இந்த விபத்து குறித்து கோட்டூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தின் காரணமாக அப்பகுதியில் சற்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டத்தால், அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.