தூத்துக்குடியில் 17 வயது சிறுமியை தருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி காதலன் அவனது நண்பனுடன் சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த சம்பத்தில் இருவரும் போக்சோ சட்டத்தில் கீழ் கைது காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அவன் கூடவும் நீ தனிமையில் இருக்கனும்..! காதலியை நண்பனுக்கும் விருந்தாக்கிய விபரீத காதலன்! தூத்துக்குடி பரபர..!

தூத்துக்குடி மாவட்டத்தில் உடன்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி, இவர் உடன்குடி உள்ள செல்போன் கடையில் வேலை செய்துள்ளார். இவரது தாயார் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சிறுமியின் தந்தை சொந்த கிராமத்தில் வசித்து வந்தார்.
இந்நிலையில், சிறுமி வேலை செய்யும் அதே செல்போன் கடையில் ஐயப்பன் என்ற நபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியது. இதற்கிடையில், தன்னுடைய தாயாரை பார்ப்பதற்காக சிறுமி திருப்பூருக்கு செல்வதாக தந்தையிடம் கூறிச் சென்றார். அப்போது அவருடன் ஐயப்பனும் சென்றுள்ளார்.
பின்னர், திருப்பூரில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்ட சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறிய ஐயப்பன் திருச்செந்தூருக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வாடகை வீட்டில் தங்கி சிறுமியை அங்கு அடைத்து வைத்துள்ளார். மேலும், அந்த சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். அதுமட்டுமின்றி, தனது நண்பனுக்கு அந்த சிறுமியை விருந்துயாகியுள்ளார். பின்னர் இருவரும் சேர்ந்து அந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்துள்ளார்.
இருவரும் கூட்டு பலாத்காரம் செய்த பின்னர், கடந்த 3-ந் தேதி இரவில் சிறுமி மயங்கிய நிலையில் ஆட்டோவில் சொந்த ஊருக்கு அழைத்து வந்து அவரது வீட்டின் முன்பு இறக்கி விட்டு சென்றனர். அந்த சிறுமியின் தலைமுடி வெட்டப்பட்டும், உடலில் நகக்கீறல்களும், சிகரெட்டால் சூடு வைத்ததற்கான காயங்களும் இருந்தன.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமியின் தந்தை, உடனே அவரை சிகிச்சைக்காக உடன்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அரசு மருத்துவமனையில், சிகிச்சை அளித்த மருத்துவர்கள், சிறுமியின் உடலை கண்டு காவல் துறையினர்க்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்த திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
அந்த விசாரணையில், ஐயப்பன் தன்னுடைய நண்பரான மணிகண்டனுக்கும் காதலியை விருந்தாக்கியதாக தெரிய வந்தது. மேலும், இதற்கு மறுப்பு தெரிவித்த சிறுமியை ஐயப்பனும், மணிகண்டனும் சரமாரியாக தாக்கினர். மேலும் சிறுமியின் உடலில் சிகரெட்டாலும் சூடு வைத்து, அவரது தலைமுடியையும் வெட்டி சித்ரவதை செய்துள்ளதும் அம்பலமானது.
இதில் பலத்த காயம் அடைந்த சிறுமி மயங்கி விழுந்து உயிருக்கு போராடியுள்ளார். சிறுமி இறந்து விட்டால், காவல்துறையினரிடம் சிக்கி கொள்வோம் என்று பயந்த ஐயப்பனும், மணிகண்டனும் கடந்த 3-ந்தேதி இரவில் சிறுமியை அவரது சொந்த கிராமத்துக்கு ஆட்டோவில் அழைத்து சென்று விட்டு வந்தனர். இவை அனைத்தும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் இருவரின் மீதும் வழக்குப்பதிவு செய்து. நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தயுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.