கமிசன் கொடுக்க மாட்டியா? நெல் விற்க வந்த விவசாயிகளை விரட்டி விரட்டி அடித்த அரசு அதிகாரி! கள்ளக்குறிச்சி பரபரப்பு!

விவசாயிகளை அரசு ஊழியர் ஒருவர் அடிக்க முயன்ற சம்பவமானது கள்ளக்குறிச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மணலூர்பேட்டை எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு ஒழுங்குமுறை கொள்முதல் விற்பனை கூடம் அமைந்துள்ளது. இதன் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்கள் வயல்வெளிகளில் அயராது உழைத்து கொள்முதல் செய்த நெல்லை மூட்டை மூட்டையாக வைத்துக்கொண்டு காத்துக் கிடக்கின்றனர்.

கடந்த சில வாரங்களாக மூட்டை ஒன்றுக்கு 1200 ரூபாய் கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் தாங்கள் கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை விரைவாக கூடத்திற்கு எடுத்து வந்தனர்.

விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியவுடன் கூடத்தில் வேலை பார்க்கும் அதிகாரிகள் தவறான யோசனையில் ஈடுபட்டுள்ளனர். 1200 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நெல் மூட்டையை, 150 ரூபாய் கமிஷன் தந்தால் தான் விற்று செல்ல இயலும் என்று கறாராக கூறியுள்ளனர.

சில விவசாயிகள் வேறு வழியின்றி கமிஷன் பணத்தை செலவழித்து மூட்டைகளை விற்றுள்ளனர். சிலர் அதிகாரிகளை எதிர்த்து கேட்டதற்கு கமிஷன் கொடுத்தால் மட்டும்தான் நெல் விற்பனை செய்யப்படும் என்று திட்டவட்டமாக கூறியுள்ளனர். கேள்வி கேட்டவர்களை பல நாட்களாக அலைய விட்டுள்ளனர். 

வயதான விவசாயி ஒருவர் கடந்த இரு தினங்களாக கமிஷன் தராமல் நெல் மூட்டையை விற்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அதிகாரிகள் இருவர் அந்த முதியவரை செருப்பால அடிக்க முயன்றுள்ளனர்.

அப்போது அருகிலிருந்த யோசனைகள் ஒன்றுகூடி அரசு அதிகாரிகளுக்கு எதிராக முழக்கமிட்டனர். இதனால் பயந்துபோன அரசு அதிகாரிகள் அங்கிருந்து தப்பி சென்றனர். 1,200 விற்கப்பட வேண்டிய நெல் மூட்டையை, கமிஷனுக்கு ஆசைப்பட்டு 1,003 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவமானது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.