இதுக்கெல்லாமா பீச்சை மூடி வைப்பாங்க? பிலிப்பைன்ஸ் அதிசயம்! நம்ம ஊரு பீச்சுக்கு மானம் போகுதே...

கடற்கரையில் பெண்னொருவர் செய்த மோசமான செயலினால் கடற்கரையே மூடப்பட்டுள்ள சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பிலிப்பைன்ஸ் நாட்டில் போரக்கே என்ற கடற்கரை அமைந்துள்ளது. இங்கு பெண் ஒருவர் தன் குழந்தை மலம் கழித்த டயாபரை மண்ணில் புதைக்க முயற்சித்துள்ளார். இதற்கும் மேலாக இன்னொரு குழந்தையின் தாய் தன் குழந்தையின் மலத்தை கடல் நீரில் சுத்தம் செய்துள்ளார். இத்தகைய அருவருப்பான செயல்களை வீடியோ எடுத்த பெண் உள்ளூர் ஊடகம் ஒன்றிடம் ஒப்படைத்தார். 

ஊடகத்தினர் இந்த வீடியோவை வெளியிட, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். அதன்படி கடற்கரையில் அந்தப் பகுதியில் மட்டும் மூன்று நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போன்று கடல் நீரில் மலம் கலந்திருப்பதால் மூன்று நாட்களுக்கும் யாருக்கும்  நீந்துவற்கு அனுமதியில்லை.

இந்த சம்பவம் குறித்து பெண் ஒருவர் கூறுகையில், "அந்தப் பெண்ணின் செயல் பிற சுற்றுலா பயணிகள் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாங்கள் அனைவரும் அந்தப் பெண்ணைக் கண்டவுடன் கூச்சலிட தொடங்கினோம்" என்று கூறினார்.

கடற்கரையின் அதிகாரிகள் அந்த இரு பெண்களை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் அவர்கள் பிடித்து வைத்திருந்த டயாபரின் காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

இந்த சம்பவமானது பிலிப்பைன்ஸ் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.