ஜெய்ப்பூர்: பெண் புலிக்காக, ஆண் புலிகள் 2 சண்டையிட்டுக் கொள்ளும் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.
ஒரே ஒரு பெண் புலி..! பாலினச்சேர்க்கை..! 2 சகோதர புலிகள் ஆக்ரோசமாக மோதிக் கொண்ட பயங்கரம்! வைரல் வீடியோ!
ராஜஸ்தான் மாநிலம் ராந்தம்போர் தேசிய பூங்காவில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு வளரும் புலிகளில், டி57 (சிங்ஸ்த்) மற்றும் டி58 (ராக்கி) எண் குறியிடப்பட்ட 2 ஆண் புலிகளும், ஷர்மிலி என்ற பெண் புலியின் குட்டிகள் ஆகும். சகோதரர்களான இவை தற்போது வளர்ந்து பருவத்தை எட்டிய நிலையில், அதே பூங்காவில் வளரும் டி39 என்ற பெண் புலி மீது காதலில் விழுந்துள்ளன.
இதன்படி, அந்த பெண் புலியிடம் யார் நெருங்கிப் பழகி, உறவு கொள்வது என்பது தொடர்பாக, சகோதரர்களுக்குள் கருத்து மோதல் முற்றி, மோதலாக வெடித்துள்ளது. மனிதர்களைப் போலவே காதலுக்காக, 2 புலிகளும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி தாக்கிக் கொண்ட நிலையில், பிரச்னைக்குக் காரணமான பெண் புலி அங்கிருந்து தப்பியோடிவிட்டது.
இந்நிலையில், இந்த சண்டை காட்சி படம்பிடிக்கப்பட்ட நிலையில், இதனை பூங்காவின் உயர் அதிகாரி (ஐஎஃப்எஸ் ) பர்வீண் கஸ்வான், அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியா தற்போது பலராலும் பகிரப்பட்டு வருகிறது.