பெற்றோர் கைகளில் தவழ்ந்த குழந்தை! நொடிப் பொழுதியில் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்ட பரிதாபம்! நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

கோவை: பெற்றோர் கண் முன்னே இரண்டரை வயது குழந்தை வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தமிழகத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்து வருகிறது.  பலத்த மழை காரணமாக, பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதில், கோவை மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். அங்குள்ள வால்பாறையை சுற்றி அமைந்துள்ள பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமங்கள், முற்றாக சேதமடைந்துள்ளன.

சர்க்கார்பதி பவர்ஹவுஸ் அருகே  பாறைகள் சரிந்து கால்வாயில் விழுந்தது. அதில், அருகே உள்ள நாகர் ஊத்து கிராமத்தில் வெள்ள நீர் புகுந்து, வீடுகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன.

இதில், 6 பேர் காயமடைந்தனர். இதுதவிர, குஞ்சப்பன் என்பவரின் இரண்டரை வயது பெண் குழந்தை சுந்தரி, கண் முன்னேயே வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டது. கைகளில் தவழ்ந்து கொண்டிருந்த குழந்தை திடீரென கொட்டிய பேய் மழையால் கைகளில் இருந்து நழுவியுள்ளது. சேற்றுடன் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட குழந்தையை தேடி அழைந்தனர்.

நீண்ட தேடுதலுக்குப் பின், அந்த குழந்தையை 5 கிமீ தொலைவில் உள்ள பீட்டர் கால்வாயில் இருந்து சடலமாக மீட்டுள்ளனர். குழந்தையின் சடலம் பெற்றோரிடம் இன்று (ஆகஸ்ட் 15) ஒப்படைக்கப்பட்டபோது, அவர்கள் கதறியழுத சம்பவம் மனதை உருக்குவதாக இருந்தது.