195 ஆண்களை மயக்கி பாலியல் பலாத்காரம்..! 18 வயது இளைஞன் அரங்கேற்றிய பகீர் செயல்! செல்போன் வீடியோ வெளியாகி அதிர்ச்சி!

லண்டன்: சுமார் 195 ஆண்களை கதற கதற பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடிய நபர் ஒருவழியாகக் கைது செய்யப்பட்டார்.


அந்த நபரின் பெயர் ரெய்ன்ஹார்ட் சினாகா. 36 வயதான இவர், இளம் ஆண்களிடம் கவர்ச்சியான முறையில் பேசி நட்புறவாக நெருங்கிப் பழகுவது வழக்கம். பிறகு அவர்களை மான்செஸ்டரில் உள்ள தனது வீட்டிற்கு வரவழைத்து, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துவிடுவார். மயக்கத்தில் இருக்கும் ஆண்களை பயன்படுத்தி, தனது பாலியல் இச்சையை தீர்த்துக் கொள்வது அவரது வழக்கமாகும். அது மட்டுமின்றி, அவர்களை பலாத்காரம் செய்வதை, ஆர்வமாக வீடியோ பதிவு செய்வதையும் ஒரு வேலையாகச் செய்து வந்திருக்கிறார்.  

இந்நிலையில், சமீபத்தில் சினாகா, தனது 195வது பலாத்காரத்திற்கு நாள் குறித்தார். இதன்படி, 18 வயதான ஒரு ரக்பி விளையாட்டு வீரரை குறிவைத்து கடத்திச் சென்றிருக்கிறார். 6 அடி உயரமுள்ள அந்த இளைஞர் மயக்க மருந்து கொடுத்தும் அசராத காரணத்தால், அவரை கட்டையால் அடித்து, நிலைகுலைய செய்திருக்கிறார்.

பிறகு, அந்த இளைஞரை ரத்த வெள்ளத்தில் கதற கதற கண்டம் செய்துவிட்டு தப்பியோடியுள்ளார். எனினும், ஓரளவு சுய நினைவுடன் இருந்த இளைஞர் இதுபற்றி உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த போலீசார், அவரை நம்பாமல் கைது செய்து விசாரித்தனர். விசாரணையின்போது, இளைஞரின் ஆடைக்குள் ஐஃபோன் ஒன்று இருந்துள்ளதை கண்டறிந்தனர். அது, சினாகாவின் ஐஃபோன். அவர் தவறுதலாக விட்டுவிட்டுச் சென்றுள்ளார்.

உடனடியாக, அந்த ஐஃபோனை சோதனையிட்டதில், சினாகாவின் காம களியாட்டங்கள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டிருந்தன. இது ஒன்றே மிகப்பெரும் சாட்சியமாக மாற, அந்த நபரை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தற்போது அவருக்கு 60 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 30 ஆண்டுகள் சிறையில் இருந்தபிறகே அவருக்கு ஜாமீன் கிடைக்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.