குளியல் அறைக்கு வா! ஆசையோடு அழைத்த கணவன்! வர மறுத்த மனைவி! பிறகு ஏற்பட்ட விபரீதம்!

அகமதாபாத்: பாத்ரூம் செக்ஸ் சம்மதிக்காததால், தன்னை தாக்கியதாகக் கூறி கணவன் மீது மனைவி புகார் அளித்துள்ளார்.


அகமதாபாத்தில் உள்ள பாவ்நகரைச் சேர்ந்த 19 வயது இளம்பெண், 4 மாதங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டார். அவரது கணவன் வீட்டில் இல்லாத நிலையில், கணவனின் மூத்த சகோதரன், அடிக்கடி அந்த பெண்ணிற்கு பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

இது தவிர, பெண்ணின் கணவனோ, வீட்டிற்கு வந்தால் அடிக்கடி குளியலறையில் தன்னுடன் செக்ஸ் செய்யும்படி கட்டாயப்படுத்தி வந்துள்ளார். அதற்கு அவர் சம்மதிக்காததால், அவரை அடித்து துன்புறுத்தியுள்ளார். மேலும், வரதட்சணை கேட்டு, கணவனின் சகோதரிகளும் தொந்தரவு செய்துள்ளனர். 

இப்படி மாறி மாறி புகுந்த வீட்டில் பல தொந்தரவுகளை, 4 மாத திருமண வாழ்க்கையில் சந்தித்த அப்பெண், இதுபற்றி தற்போது போலீசில் புகார் அளித்துள்ளார். இதுபற்றி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். குறிப்பிட்ட பெண்ணை அவரது பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்துள்ளனர். 

ஒரே வீட்டிற்குள், இந்த இளம்பெண் சந்தித்த பிரச்சனைகள், மிகவும் வேதனைக்குரியதாக உள்ளதென்று போலீசார் குறிப்பிடுகின்றனர். அந்த பெண்ணின் கணவன், அவனது சகோதரிகள், மூத்த சகோதரன் ஆகியோர் மீது தனித்தனி பிரிவுகளில் வழக்குப் பதிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.