சிறுவன் உட்பட 184 பேருக்கு சவுதி அரேபியா அரசு மரண தண்டனை விதித்துள்ள சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
184 பேரின் தலையை துண்டித்து மரண தண்டனை! வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் அனுப்பிய 16 வயது சிறுவன் தலையும் துண்டானது! பதற வைக்கும் சம்பவம்!
சென்ற ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சவுதி அரேபியாவில் 184 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மனதளவில் நிறைவேற்றப்பட்டவர்களுள் 3 பேர் சிறுவர்களாக கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 6 ஆண்டுகளில் மத்திய கிழக்கு நாடுகளில் அதிகளவில் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை இதுவேயாகும்.
அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்திற்கு தூண்டும் வகையில் குறுஞ்செய்தி அனுப்பியதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்துல் கரீம் என்ற 21 வயது இளைஞர் 16 வயதாக இருக்கும் போது கைது செய்யப்பட்டார்.
அவர் வாக்குமூலம் அளிக்கும் வரை அவருடைய கைகள் தலைக்குமேல் சங்கிலியால் கட்டப்பட்டு இருந்தது. மேலும் அவரை மின்சாரத்தால் தாக்கி சித்திரவதை செய்தனர். பின்னர் ஒரு வழியாக சென்ற ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அப்துல் கரீமுக்கு மரண தண்டனையை நிறைவேற்றினர்.
இதனிடையே பயங்கரவாதம் குற்றம் சாட்டப்பட்ட 36 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தலுக்காக 82 பேருக்கும், கொலைக்கு 57 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
அமெரிக்காவும், பிரிட்டனும் சவுதி அரேபியாவுக்கு அழுத்தம் கொடுத்தால் பிராந்தியத்தில் மாற்றம் ஏற்படும் என்று மரணதண்டனைக்கு எதிராக பிரச்சாரம் செய்துவரும் குழுத்தலைவரான மாயா ஃபோவா அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.