திருமணமாகி வெறும் 5 நாள் தான்..! வீட்டு மாடி அறையில் சடலமாக தொங்கிய 18வயது சிவசக்தி! தேனி பதற்றம்!

தேனியில் திருமணமாகி 5 நாட்களே ஆன நிலையில் மணப் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தேனி மாவட்டம் கம்பம் சுவாமி விவேகானந்தர் தெருவைச் சேர்ந்தவர் சேதுபதி 22, இவருக்கும் குரங்குமாயன் தெருவை சேர்ந்த மணிகண்டன் என்பவருடைய மகளான சிவசக்தி 18, ஆகிய இருவருக்கும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் திருமணமாகி மறுவீட்டு அழைப்பு முடிந்து சேதுபதி தனது மனைவியுடன் தனது வீட்டின் மொட்டை மாடியில் உள்ள அறையில் வசித்து வந்துள்ளார்.

கணவன் மனைவி இருவரும் எந்த ஒரு கருத்து வேறுபாடு இல்லாமல் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் சேதுபதி வெளியே சென்ற நிலையில் சிவசக்தி வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். இதையடுத்து நீண்ட நேரமாகியும் தனது மருமகள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்து வந்துள்ளதால் மாமியார் புஷ்பவள்ளிக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் மாடியில் உள்ள தனது மகனின் அறைக்கு சென்று பார்த்தபோது கதவு உள்ளே பூட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில் உடனே அதிர்ச்சியடைந்த புஷ்பவள்ளி நீண்ட நேரம் கதவை தட்டியுள்ளார் கதவு திறக்கப்படாத நிலையில் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது மின்விசிறி அமைப்பதற்காக பொருத்தப்பட்டு இருந்த க்ம்பியில் தனது மருமகள் சுடிதார் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்தைப் பார்த்த உடனே அதிர்ந்துள்ளார். இதையடுத்து புஷ்பவள்ளி கூச்சலிட்டுள்ளார் .

இந்நிலையில் அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தபோது சிவசக்தி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனே ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவல் அறிந்து விரைந்து வந்த ஆம்புலன்சில் அவரது உடலை ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிவசக்தி இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தற்கொலைக்கான காரணங்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏதேனும் இருந்திருக்குமோ என்ற நோக்கத்தில் காவல்துறையினர் விசாரணையை அவரது கணவர் சேதுபதியிடம் இருந்து தொடங்கியுள்ளனர். மேலும் சிவசக்தி திருமணத்திற்கு முன்னர் வேறு யாரையோ விரும்பியிருக்கலாம் என்ற நோக்கத்தோடும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் திருமணமாகி 5 நாட்களிலேயே மணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.