பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவர் அதே பகுதியில் மன நலம் பாதிக்கபட்ட சிறுவனை ஓரின சேர்க்கைக்கு உள்ளாகியதால் கைது.
14 வயது சிறுவனுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்ட 18 வயது ஆண்..! கண்டுபிடித்த பெற்றோர்! பிறகு அரங்கேறிய பகீர் சம்பவம்!
கூடலூர் கருணாநிதி காலனியை சேர்ந்த பன்னிரண்டாவது வகுப்பு படித்து வந்த மாணவர் அதே பகுதியை சேர்ந்த 14 வயதே ஆன சிறுவனை ஓரின சேர்க்கைக்கு உள்ளாக்கியுள்ளார். மன நலம் பாதிக்கபட்ட சிறுவன் என்பதால் அவனது பெற்றோரிடம் சொல்லமுடியாமல் சிறுவன் இருந்ததை சாதகனாக மாணவன் பயன்படுத்தி கொண்டுள்ளான்.
தொடர்ந்து பல முறை பாலியல் ரீதியாக ஓரின சேர்க்கைக்கு உள்ளாக்கி துன்புறுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று பெற்றோர் மகனுக்கு நேர்ந்த கொடுமையை நேரில் பார்த்தாக கூறப்படும் நிலையில் காவல் துறையில் புகார் கொடுத்துள்ளனர்.
அந்த புகாரின் அடிப்படையில் விசாரணையில் ஈடுபட்ட போலீசார் மாணவனை கைது செய்து, மதுரை சிறார் சீர் திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளனர். மாணவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய பட்டுள்ளது.