நான் அவளை லவ் பண்றேன்!!! உனக்கு எங்கடா எரியுது!!! காதலியின் அண்ணனை சதக்!! சதக்!!! காதலர் செய்த வெறித்தனம்!!!

கள்ளக்காதலால் ஏற்பட்ட தகராறினால் இளைஞரை ஆட்டோ ஓட்டுநர் கொலை செய்துள்ள சம்பவமானது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவையில் கிணத்துக்கடவு என்னுமிடம் அமைந்துள்ளது. இப்பகுதியில் தினேஷ் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய வயது 22. இவருக்கு ஒரு தங்கையுள்ளார். அப்பகுதியில் தினேஷ் குமாரின் உறவினரான 18 வயதான மணிகண்டன் என்ற ஆட்டோ ஓட்டுநர் வசித்து வந்துள்ளார். இவர் தினேஷ்குமார் என் தங்கை மீது ஒரு தலை காதல் கொண்டிருந்தார்.

இதனை தெரிந்துகொண்ட தினேஷ்குமார் மணிகண்டனை கண்டித்துள்ளார். உறவினர்களாக இருப்பினும், சகோதரர் முறை வருவதால் காதலை நிறுத்தி கொள்ளுமாறு தினேஷ்குமார் மணிகண்டனுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். இருப்பினும் மணிகண்டன் திருந்தவில்லை. தினேஷ் குமாரின் குடும்பத்தினர் பாதயாத்திரை சென்று கொண்டிருந்தபோது, அவருடைய தங்கைக்கு மணிகண்டன் ஒரு காதல் குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த தினேஷ்குமார் மீண்டும் மணிகண்டனை தனிமையில் அழைத்து அறிவுரை கூறியுள்ளார். அப்போதும் மணிகண்டன் தன்னுடைய காதலில் பிடிவாதமாக இருந்துள்ளார். இந்நிலையில் தினேஷ் மணிகண்டனை ஊர் வெளிப்பகுதிக்கு அழைத்து சென்று அறிவுரை கூற தொடங்கியுள்ளார். 

அன்று தினேஷ்குமாருக்கும் மணிகண்டனுக்கும் பெருத்த வாக்குவாதங்கள் ஏற்பட்டன. ஒரு கட்டத்தில் வாக்குவாதங்கள் முற்றி போய் கைகலப்பு வரை சென்றது. அப்போது மணிகண்டன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தினேஷ்குமார் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார்.

இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அப்பகுதி காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். சம்பவயிடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தினேஷ் குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை செய்து தலைமறைவாக இருந்த மணிகண்டனை காவல்துறையினர் வலைவீசி தேடி கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவமானது கிணத்துக்கடவு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.