பீகார் மாநிலத்தில் தொடர்ந்து படிக்க ஆசைப்பட்ட 17 வயதுச் சிறுமியை சாதிக் கட்டுப்பாட்டின் பேரில் 7 பேர் சேர்ந்து கொன்ற கொடூரம் அரங்கேறியுள்ளது.
10ம் வகுப்புக்கு மேல் நீ படிக்க கூடாது! 17 வயது சிறுமியை அடித்தே கொலை செய்த கிராம மக்கள்! திகில் கிளப்பும் காரணம்!
பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்துக்குட்பட்ட சான்புரா கிராமத்தைச் சேர்ந்த 17 வயதுச் சிறுமியை 7 பேர் கொண்ட கும்பல் அடித்துக் கொன்றுவிட்டதாகவும், அதனை எதிர்த்துக் கேட்ட சிறுமியின் குடும்பத்தினரை அவர்கள் சொந்த வீட்டுக்குள்ளேயே வைத்துப் பூட்டி விட்டதாகவும் போலீசார் தெரிவிக்கிறனர்.
மேலும் காவல் நிலையத்தில் புகார் அளிக்காமல் உறவினர்களே சிறுமிக்கு இறுதிச் சடங்குகளை செய்துவிட்டதாகவும் போலீசார் கூறுகின்றனர். இருப்பினும் சிறுமியின் மரணத்தில் மர்மம் குறித்து தங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதையடுத்து நேரில் சென்று விசாரித்த போது கிராமத்தினர் பல அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டதாகக் கூறுகின்றனர் போலீசார்.
இறந்த சிறுமியின் சமூகத்தில் பெண்களை மெட்ரிகுலேஷன் வகுப்புகளுக்கு மேல் படிக்க அனுமதிப்பதில்லை என்றும், ஆனால் அந்தச் சிறுமி படித்தே தீருவதென உறுதியாக இருந்ததாகவும் கிராமத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் தங்களின் கேடுகெட்ட கட்டுப்பாடுகளுக்கு இழுக்கு நேர்ந்துவிடக் கூடும் என்ற அச்சத்தில் அந்தக் கும்பல் அந்தச் சிறுமியை கொடூரமாக அடித்துக்கொன்றதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக 3 பேரை கைது செய்துள்ள போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த 21ம் நூற்றாண்டிலும் பெண் அடிமைத்தனத்தை ஊக்குவிப்பதுடன் கொலை செய்யவும் துணிந்துவிட்ட அவர்களுக்கு பெரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்.