31 வயது பெரியப்பாவால் கர்ப்பமான 17 வயது சிறுமி! அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்!

கோவாவில் 17 வயதுச் சிறுமியை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து கருவுறச் செய்த கயவனை போலீசார் கைது செய்துள்ளனர்.


31 வயதான முகமது ரஃபீக் பட்டேல் என்பவன் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெரியப்பா என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அவன் சிறுமியை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தனியாக அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது அவன் அந்தச் சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாகக் சொல்லப்படுகிறது.

அதன் பின்னர் அவன் பலமுறை அந்தச் சிறுமியுடன் அதுபோல நடந்துகொண்ட நிலையில் சிறுமி கருவுற்றாள். அவள் கருவுற்றது தெரிய வந்ததை அடுத்து அவன் சிறுமியுடனான தொடர்பைத் துண்டித்தான். இந்நிலையில் சிறுமி கருவுற்றது அவளது  குடும்பத்தினருக்கும் தெரிய வந்ததை அடுத்து அது குறித்து விசாரித்தறிந்த அவர்கள் முகமது ரஃபீக் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இதையடுத்து வியாழக்கிழமை புகார் அளிக்கப்பட்ட 2 மணி நேரத்தில் முகமது ரஃபீக்கை கைது செய்த போலீசார், போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.