அடேங்கப்பா முதலீடு! 5 ஆண்டுகளில் 1600% லாபம் கொடுத்த பங்கு இதுதான்!

KEI Industries 2014ம் ஆண்டு 30 ரூபாயாக இருந்த நிறுவனத்தின் பங்கு விலை தற்போது 532 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.


கடந்த ஐந்து ஆண்டு லாபத்தை கணக்கிட்டால் கிட்டத்தட்ட 1676 சதவிகிதம் லாபம் கொடுத்துள்ளது இந்த நிறுவனத்தின் பங்குகள்.

உதாரணமாக 2014ம் ஆண்டு இந்த நிறுவனத்தின் ஷேரில் 1 லட்சம் முதலீடு செய்திருந்தால் தற்போது இந்த ஷேரின் மதிப்பு சுமார் ரூ. 17.7 லட்சமாக இருந்திருக்கும்.

கேபிள் உற்பத்தி நிறுவனமாக இது கடந்த ஒரு ஆண்டில் 94 சதவிகித லாபமும், நிறுவனம் பங்குச் சந்தையில் வர்த்தகமாகி வருவது முதல் சராசரியாக 47 சதவிகித லாபத்தையும் கொடுத்துள்ளது.

இந்த நிலையில் CARE மதிப்பீட்டு நிறுவனம் இந்த நிறுவனத்திற்கு நீண்ட கால அடிப்படையில் Long Term Bank Facilities availed by the company எனும் தரச்சான்று கொடுத்துள்ளது.

ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் இந்த நிறுவனத்தின் லாபம் 42 சதவிகிதம் உயர்ந்து 45.81 கோடியாக உள்ளதாகவும், கடந்தாண்டு இதே காலகட்டத்தில் இந்த நிறுவனத்தின் லாபம் 32.17 கோடியாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனத்தின் நிகர விற்பனை ஜூன் காலாண்டில் 22 சதவீதம் அதிகரித்து 1,081.36 கோடியாக உள்ளதாகவும், 2019-20 நிதியாண்டில் 17 முதல் 18 சதவீதம் வரையிலான வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது KEI Industries நிறுவனம்.

கடந்த 12 காலாண்டாக இந்த நிறுவனம் இரட்டை இலக்க லாபத்தைக் கொண்டு பயணிக்கிறது என்றும்,கேஇஐ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் நடப்பு ஆண்டில் OB எனப்படும் ஒப்பந்தம் புத்தகம் ரூ .4,414 கோடியாக உள்ளதாகவும். கடந்த 3 ஆண்டுகளில் பல மாநில மின்சார வாரியங்கள்,

பவர் கிரிட் போன்றவற்றிலிருந்து அதிகமாக ஆர்டர்கள் வருவதால் அதன் OB வலுவாக வளர்ந்தது என்று ஏஞ்சல் புரோக்கிங் ஷேர் மார்க்கெட் நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏஞ்சல் புரோக்கிங் நிறுவனத்தின் அறிக்கையின்படி KEI Industries நிறுவனம். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சராசரியாக 20 சதவிகித லாபத்தினை கொடுக்கும் என்றும், இந்நிறுவனத்தின் நிகர வருவாயான CAGR 15 சதவிகிதம் உயர்ந்து 2019-21 நிதியாண்டில் சுமார் 5631 கோடி நிகர லாபத்தை அடைந்திருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

மணியன் கலியமூர்த்தி