மும்பை: 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் டிஐஜி சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிறந்த நாள் ட்ரீட் என அழைத்து 16 வயது சிறுமியுடன் பாலியல் வல்லுறவு..! 55 வயது போலீஸ் டிஐஜியின் பகீர் செயல்!
இந்தியா முழுக்க, சிறுமிகள் தொடங்கி கிழவிகள் வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் டிஐஜியாக பணிபுரிந்து வந்த நிஷிகாந்த் மோர் என்பவர், கடந்த ஜூன் மாதம், 16 வயது சிறுமி ஒருவரை வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது.
இதன்பேரில் சம்பந்தப்பட்ட சிறுமி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, டிஐஜி நிஷிகாந்த் தலைமறைவானார். அவரை 2 வாரமாக நவி மும்பை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே முன்ஜாமீன் கேட்டு நிஷிகாந்த் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், அதனை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
நிஷிகாந்தை பிடிக்க முடியாத நிலையில், அவர் மீது மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சகம் அதிரடியாக ஒரு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, அவரையும், அவருக்கு உதவியாக இருந்த டிரைவர் மற்றும் போலீஸ் கான்ஸ்டபிள் ஆகியோரையும் சஸ்பெண்ட் செய்து, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர் கைது செய்யப்படலாம் அல்லது துறை ரீதியான நடவடிக்கையை சந்திக்க நேரிடலாம் என்று, மகாராஷ்டிர உள்துறை அமைச்சக வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.