சர்ச்சில் 16 வயது சிறுமியுடன் பாலியல் வல்லுறவு! வசமாக சிக்கிய கிறிஸ்தவ பாதிரியார்!

தேவாலயம் ஒன்றில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இந்தியப் பாதிரியாருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 6 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.


இந்தியாவைச் சேர்ந்த பாதிரியார் பிரவீண் ஜான் டகோட்டா மாநிலத்தில் உள்ள தேற்கு டகோட்டா மாநிலத்தில் உள்ள ராப்பிட் சிட்டி தேவாலயத்தில் 10 ஆண்டுகள் பணியாற்றும் ஒப்பந்தத்துடன் கடந்த 2017-ஆம் ஆண்டு சென்றார். 

ஆனால் நேர் புத்தி வழி நடத்திக்கொண்டிருக்கையில் கோணல் புத்தி குறுக்கில் விட்டு ஆட்டியது போல் பிரவீணின் சபலம் அவரை உருப்படியாக இருக்க விடவில்லை. தனிமையான ஒரு சூழ்நிலையில் தேவாலயத்துக்கு வந்த 16 வயதுக்குக் குறைவான ஒரு சிறுமியிடம்  அத்துமீறிய பிரவீண் அந்தச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக்  கூறப்படுகிறது.

இது தொடர்பாக அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் அளித்த  புகாரின் பேரில் பிரவீண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.  அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் பிரிவு அடிப்படையில் அதிகபட்சமாக 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கலாம் என்ற நிலையில் பிரவீணுக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். 3 ஆண்டுகளுக்குப் பின் பிரவீண் பரோல் பெறலாம் என்றும்  நீதிபதி தெரிவித்தார். 

நீதிமன்றத்தில் தனது தவறுக்காக வருந்தி அழுத பிரவீண் தனது குற்றத்துக்கு மன்னிப்பே இல்லை என்ற போதும், பாதிக்கப்பட்ட சிறுமியிடமும், அவரது குடும்பத்தினரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகத் த் தெரிவித்தார்.