நான் 3 மாசம் கர்ப்பமா இருக்கேன் அம்மா..! திடுக்கிடும் தகவலை கூறிவிட்டு 16 வயது பெண் செய்த பகீர் செயல்!

கர்ப்பிணி சிறுமி தீக்குளித்த சம்பவமானது திருப்பூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம் எனும் பகுதி அமைந்துள்ளது. இதற்கு அருகேயுள்ள ஊதியூர் என்னும் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் அதே பகுதியை சேர்ந்த பனியன் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.

சில வாரங்களுக்கு முன்னர் அவர் பல்லடம் பகுதியில் உள்ள செலக்கரிசல் என்னும் இடத்திற்கு திருவிழாவுக்காக சென்றார். அப்போது அவருக்கு 23 வயதான வேல்முருகன் என்று இளைஞருடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் பல இடங்களுக்கு உல்லாசமாக சுற்றித்திரிந்து வந்துள்ளனர்.

இதனிடையே அந்த சிறுமி கர்ப்பம் ஆகியுள்ளார். 3 மாதங்கள் கழித்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அவர் வேல்முருகனை வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் அவரோ தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி வேறு ஒரு குடும்பம் உள்ளது என்று கூறி திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார்.

இதனால் விரக்தி அடைந்த இளம்பெண் தன்னுடைய தாயிடம் கூறி புலம்பியுள்ளார். மிகுந்த மன உளைச்சலால் பாதிக்கப்பட்டிருந்த சிறுமி யாருமில்லாத நேரத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்க முயன்றும் இயலவில்லை. இளம்பெண்ணின் பெற்றோர் அப்பகுதி காவல் நிலையத்தில் வேல்முருகனின் மீது புகார் அளித்தனர்.

புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் வேல்முருகன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த சம்பவமானது திருப்பூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.