வீட்டில் நன்றாக தூங்கிக் கொண்டிருந்த இளம் பெண்..! அருகே நின்று கொண்டிருந்த மர்ம ஆண்..! சிசிடிவி வீடியோவில் பதிவான திகில் காட்சி! என்ன தெரியுமா?

உறங்கிக்கொண்டிருந்த 15 வயது சிறுமிக்கு அருகே நின்று கொண்டிருந்தது சிசிடிவி கேமராவில் தெரியவந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்காவில் கென்சஸ் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இங்கு அணியா ராபின்சன் என்ற 15 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். இவர் சில நாட்களுக்கு முன்னர் இரவு நேரத்தில் சோஃபாவில் உறங்கி கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து சோபாவுக்கு அருகில் நின்று கொண்டு அணியாவை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.

இதனை எதுவும் அறியாமல் அணியா உறங்கிக்கொண்டிருந்தார். திடீரென்று கண் விழித்து பார்த்தபோது தன்னையே மர்ம நபர் ஒருவர் உற்று நோக்குவது போன்று அவர் உணர்ந்துள்ளார். உடனடியாக தாயை அழைத்து வேறொரு அறைக்கு செல்வதற்கு முன்பாகவே அந்த மர்ம நபர் அங்கிருந்து சென்றுவிட்டார்.

அதன் பின்னர், தன் தாயுடன் சேர்ந்து சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்துள்ளார். ஆய்வு செய்ததில் மர்ம நபர் ஒருவர் நின்று கொண்டிருந்தது சிசிடிவி கேமரா பதிவுகளில் தெளிவாக பதிவாகியிருந்தது. இதனை சாட்சியாக கொண்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் நுழைந்த போதிலும், அங்கு எந்தவித திருட்டு போன்ற அசம்பாவித சம்பவங்கள் நிகழவில்லை என்று கூறப்பட்டுள்ளது. 

இந்த சம்பவமானது அந்த மாகாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.