ஒரே நேரத்தில் 15 நர்சுகள்! அரசு மருத்துவரின் காம களியாட்டம்!

திருவாரூர் மாவட்டம் தலையாமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய அரசு மருத்துவர் மணவழகன் மீது ஆரம்பம் சுகாதார நிலையத்தை சேர்ந்த 15 செவிலியர்கள் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் அளித்துள்ளனர்.


தலையாமங்கலம் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணி புரிபவர் மணவழகன் இவர் பல்வேறு தினங்களாக அங்கு வேலை செய்யும் செவிலியர்களுக்கு தனித்தனியே பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது இதனை தொடர்ந்து ஆத்திரமடைந்த செவிலியர்கள் நேற்று இது தொடர்பாக இணை இயக்குனர் மைக்கேல் ஸ்டான்லி என்பவரிடம் இது தொடர்பாக புகார் அளித்துள்ளனர்.

புகாரின் பேரில் விசாரணை செய்த மைக்கேல் ஸ்டான்லி சிசிடிவி கேமரா மூலம் சோதனை செய்து பார்த்த போது மணவழகன் அங்கு வேலை பார்க்கும் செவிலியர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது உண்மைதான் என அறிந்த இணை இயக்குனர். இது தொடர்பாக மருத்துவரை எச்சரித்ததோடு இதுதொடர்பாக இணை இயக்குனரும் பாதிக்கப்பட்ட 15 செவிலியர்களும் அருகிலுள்ள மன்னார்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மருத்துவர் மணவழகன் மீது புகார் கொடுத்துள்ளனர்.

இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அரசு மருத்துவர் மணவழகனை  கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.