திருவண்ணாமலையில் குழந்தைகள் காப்பகத்தில் ஆதரவற்ற சிறுமிகளுக்கு, 'இரவில் ஆபாச வீடியோ போட்டுக் காண்பித்து பாலியல் வன்கொடுமை செய்த காப்பக மேலாளர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆபாச படம் காட்டி 15 சிறுமிகள் சீரழிப்பு! காப்பக காமூக வார்டனின் அடாவடி!
மகாசக்தி நகரில் அருணை குழந்தைகள் காப்பகம்
என்ற பெயரில் தனியார் காப்பகம் அரசு அனுமதியின்றி செயல்படுவதாகவும், குழந்தைகள்
பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாகவும் கிடைத்த தகவலின் பேரில் மாவட்ட
ஆட்சியர் கந்தசாமி திடீர் சோதனை நடத்தினார்.
அப்போது சிறுமிகள் தங்களுக்கு நேர்ந்த
கொடுமைகளை கண்ணீர் மல்க விவரித்தனர். அங்கு 15 குழந்தைகள் தங்கியிருந்ததும்,
காப்பக மேலாளர் வினோத்குமார் இரவில் அங்கேயே தங்கி பாலியல் தொல்லை கொடுத்ததும்
விசாரணையில் தெரியவந்தது
வினோத்குமார் கணினியில் ஆபாசப் படங்களைப்
போட்டுக்காண்பித்து அதை பார்க்குமாறு தங்களை வற்புறுத்தியதாகவும், தங்களிடம்
அத்துமீறி நடக்க முயற்சித்ததாகவும் சிறுமிகள் தெரிவித்தனர்.
எதிர்த்து கேட்டால் காப்பகத்தை விட்டு வெளியே
அனுப்பி விடுவதாகவும், அதன் பிறகு சாப்பிடவும், தங்கவும் இடம் இல்லாமல் அலைய
வேண்டும் என்றும் அவர் மிரட்டியதாகவும் அவர்கள் கூறினர்.
இதையடுத்து வினோத்குமார் போக்சோ சட்டத்தில்
கைது செய்யப்பட்டார். குழந்தைகளை அரசு காப்பகத்திற்கு மற்ற மாவட்ட ஆட்சியர்
கந்தசாமி உத்தரவிட்டார்.
காப்பகத்தில் போலீசார் நடத்திய சோதனையில் 2
கணிகள், 1 மடிக்கணினி ஆகியவற்றில் நூற்றுக்கணக்கான ஆபாச வீடியோக்கள்
பதிவேற்றப் பட்டிருந்தது தெரியவந்தது.
காப்பகத்தின் இரவு காவலர், சமையலர் உள்ளிட்ட 3
பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.