13 வயது பள்ளி மாணவி கண்ணில் சிக்கிய பென்சிலின் கூர் முனை! சக மாணவியால் ஏற்பட்ட விபரீதம்! ஆனால் மருத்துவர்கள் கூறிய தகவல்!

லண்டன்: தோழி வீசிய பென்சில் பட்டு, சிறுமி ஒருவரின் கண்ணில் காரீயம் அடைத்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மான்செஸ்டர் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி, பள்ளியில் தன்னுடன் படிக்கும் தோழி ஒருத்தியுடன் விளையாட்டிற்குச் சண்டை போட்டிருக்கிறாள். அப்போது, அந்த சிறுமி பென்சிலை எடுத்து, தனது தோழி மீது எறிய அதன் முனை சிறுமியின் கண்ணில் குத்தியுள்ளது.

உடனடியாக, சிறுமி வலது கண்ணில் கடும் வலி ஏற்பட்டு அலற, பள்ளி நிர்வாகம் அவளை மருத்துவமனையில் சேர்த்தது. அங்கு அவளை பரிசோதித்த மருத்துவர்கள் வலது கண்ணில் பென்சிலின் முனையில் உள்ள காரீயம் அடைத்துக் கொண்டிருப்பதாகக் கூறி, அறுவை சிகிச்சை மூலமாக அகற்றினர். அத்துடன், காரீயம் சில மில்லி மீட்டர் அளவில் ரெட்டினா (கண்ணின் உயிர்க்கோளம்) பகுதிக்கு தள்ளி குத்தியுள்ளது.  

இம்மியளவு பிசகி, ரெட்டினாவை குத்தியிருந்தால் சிறுமிக்கு பார்வை பறிபோயிருக்கும். அதிர்ஷ்டவசமாக அவளது பார்வை பாதுகாக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற விளையாட்டுகள் சிறுவர், சிறுமியர் இடையே நடைபெறுவது வழக்கம்தான் என்றாலும், மிகக் கவனமாக அவர்களை பாதுகாப்பது, பள்ளிகளின் கடமை என்று மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.