திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் முழுவதும் மீட்கப்பட்ட வீடியோவை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
தோண்டத் தோண்ட தங்கச் சுரங்கம்..! லலிதா ஜூவல்லரி நகைகளை போலீசார் மீட்ட பரபரப்பு வீடியோ! மலைக்க வைத்த எய்ட்ஸ் முருகன்!
காந்தி ஜெயந்தி அன்று திருச்சி மாவட்டத்தில் உள்ள லலிதா ஜூவல்லரியில் 13 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் முதன்முதலில் காவல்துறையினர் மணிகண்டன் என்ற தொல்லைகள் சம்பந்தப்பட்டவரை கைது செய்தனர். அவனிடமிருந்து நான்கரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
அதன் பின்னர் அவனுடைய வாக்குமூலத்தின்படி சுரேஷ் ரூம் முருகன் ஆகியோரும் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. காவல்துறையினர் சென்னை அதிதீவிரமாக தேடுவதை அறிந்து கொண்ட சுரேஷ் அவர்களிடம் சரணடைந்தான்.
பின்னர் காவல்துறையினர் முருகனை தேடி வந்தனர். கர்நாடகா ஆந்திரா ஆகிய பல மாநிலங்களில் தன் கைவரிசையை காட்டிய முருகன் காவல்துறையினரிடம் இருந்து தலைமறைவாக வாழ்ந்து வந்தான். திருடிய நகைகள் அனைத்தையும் காவிரி ஆற்றுப்படுகையில் முருகன் மறைத்து வைத்திருந்தான். காவல்துறையினர் தன்னை பல மாநிலங்களில் தேடி வருவதை உணர்ந்த முருகன் பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தான்.
அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கூட்டாளியான கணேசன் என்பவரை காட்டி கொடுத்தான். இந்நிலையில் சுரேஷ், முருகன்,கணேசன் ஆகியோரை அழைத்துக்கொண்டு காவல்துறையினர் காவிரி ஆற்றுப்படுகைக்கு சென்றனர்.
அங்கு மறைக்க வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளை காவல் துறையினர் மீட்டெடுத்தனர். பின்னர் நகைகளை பெண்களும் நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தினர். இந்த சம்பவங்களின் வீடியோவானது எடுக்கப்பட்டு தற்போது காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 12 நாட்களாக ஓயாமல் உழைத்து வந்த காவல்துறையினர், திறம்பட செயல்பட்டு வெற்றிகரமாக முடித்து வைத்துள்ளனர்.