என்னடா நடக்குது இங்கே? 12 வயது மாணவியை கர்ப்பிணியாக்கிய 14 வயது மாணவன்! பிள்ளைங்களைக் கவனிக்காம பெத்தவங்க என்னதான் செய்றீங்க?

14 வயது சிறுவன் 12 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய  சம்பவமானது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


சென்னையில் 9-ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன், 7-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியுடன் நெருக்கமான தொடர்பில் இருந்து வந்துள்ளான். 6 மாதங்களாக சிறுவன்  அந்த பெண்ணை வற்புறுத்தி காதலித்து வந்துள்ளார். மேலும் அந்த பெண்ணை சில முறை கற்பழித்து உள்ளான்.

சிறுமி 5 மாதங்களுக்கு முன்னர் கர்ப்பமாகியுள்ளார். ஆனால் காலம் கழித்தே அவருடைய பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. பொறுமையாக பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் சம்பந்தப்பட்ட சிறுவனை  போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். சிறுவனை நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஒப்படைத்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, சிறுவனை சீர்திருத்தப்பள்ளியில் அனுமதிக்கவும், பாதிக்கப்பட்ட பெண்ணை பாதுகாப்பு முகாமில் அனுமதிக்கவும் உத்தரவிட்டார்.

இந்த சம்பவமானது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.