வீட்டில் தனிமையில் இருந்த 16 வயது மாணவி! உள்ளே சென்று 35 வயது நபர் செய்த பகீர் செயல்! கோவை பகீர்!

கோவை: 10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிரைவர் கைது செய்யப்பட்டார்.


கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் டிரைவராக பணிபுரிபவர் அருண்குமார் (35 வயது). ராமநாதபுரம் கணேசபுரம் சடையப்பர் கோவில் வீதியை சேர்ந்த இவர், சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு  அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளார்.  பார்க்கும் இடங்களில் எல்லாம் மாணவிக்கு தொல்லை கொடுத்து வந்த அருண்குமார், மாணவியின் வீட்டை அடையாளம் கண்டுபிடித்து அங்கேயே சென்று, கட்டிப்பிடித்து சில்மிஷம் செய்திருக்கிறார்.

பின்னர், இந்த விவகாரத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டியும் உள்ளார்.  அந்த நபரின் சில்மிஷம் நாளுக்கு நாள் எல்லை மீறிப் போகவே, பொறுமை இழந்த மாணவி, இதுபற்றி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அவர்கள், உடனடியாக, சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தனர். இந்த வழக்கு பின்னர் ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இதன்பேரில், போலீசார் டிரைவர் அருண்குமாரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.